Skip to main content

600 கோடி சொத்து; சிக்கிய பாஜக பெண் நிர்வாகி -  அம்பலப்படுத்தும் ‘தமிழர் முன்னேற்றப் படை’ வீரலட்சுமி

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

 Veeralakshmi  interview

 

பாஜகவின் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களை தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனர் வீரலட்சுமி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் ஒரு காலத்தில் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தவர். அதன் பிறகு அவர் மணலைத் திருடி விற்கும் வேலையைச் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில் 600 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். இது பொதுமக்கள் எங்களிடம் கொடுத்த புகார். இவருக்கு படிப்பு கிடையாது. நிரந்தர வருமானம் என்று எதுவும் கிடையாது. இவர் அரசியல்வாதிகளுக்கு பினாமியாகவும் செயல்படுகிறார். அரசையே ஏமாற்றி, ஊழல் செய்து பணம் சம்பாதிப்பவர் இவர். 

 

இந்தப் பெண் குறித்த புகார் வந்ததும் நாங்கள் விசாரணையில் இறங்கினோம். தோண்டத் தோண்ட அவர் தவறாக சம்பாதித்து சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் எங்களுக்கு நிறைய கிடைத்தன. அத்தனையும் கோடிக்கணக்கில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள் தான். கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். சாதாரண அமைப்பை நடத்தி வரும் என்னால் இவ்வளவு ஆவணங்களை எடுக்க முடிகிறது என்றால், வருமானவரித்துறை நினைத்தால் என்னென்ன செய்யலாம்?

 

இவர் போன்றவர்களின் ஊழல்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பாதுகாப்பு வழங்குகிறது. இதுபோன்ற கருப்பு பணத்தில் அண்ணாமலைக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் தனித்தனியே பங்குகள் செல்கின்றன. இதுகுறித்து பாஜகவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை என்ன முட்டாளா? ஐபிஎஸ் படித்தவர் தானே? ஊழலை எதிர்த்து நடைபயணம் செல்கிறேன் என்று சொல்லும் அண்ணாமலை, தன் சொந்தக் கட்சியில் நடக்கும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் மறுக்கிறார்? இவருக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம்.

 

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைத் தான் ஆளுநர் அடிக்கடி சந்திக்கிறார். தமிழ்நாட்டின் குற்றவாளிகள் பலர் பாஜகவில் தான் இருக்கிறார்கள். குற்றவாளிகள் அனைவரையும் தங்கள் கட்சியில் சேர்த்து, அவர்களுடைய கருப்பு பணத்தை கட்சி நிதியாக இவர்கள் பெறுகிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது. அண்ணாமலை செல்வது உல்லாச யாத்திரை தான். ஊழல் என்று திமுக குறித்து மட்டும் அண்ணாமலை பேசுகிறார். அதிமுக, பாஜகவில் யாரும் ஊழல் செய்யவில்லையா? அண்ணாமலை கர்நாடகாவுக்கே சென்றுவிடுவது நல்லது. பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புகள் நேர்மையாக செயல்படவில்லை.