Skip to main content

விஜய் - அட்லி கூட்டணியில் இணைந்த அஜித் பட நடிகர்...! ரசிகர்கள் உற்சாகம்   

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
vijay

 

 

 

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இப்படத்தின் செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பித்தது. மேலும் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் விவேக் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மெர்சல், சர்கார் படங்களில் விஜய்யுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்