'காசு மேலே காசு' இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கே.எஸ். பழனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக், காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர். இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மயில்சாமியின் நட்பு மற்றும் அவரது நல்ல குணங்களை பற்றி பற்றி நடிகர் விவேக் பேசுகையில்....எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மயில்சாமி சினிமாவில் இருக்கிறான்.அவர் என்னை விட மூத்தவராக இருந்தாலும் நான் அவனை வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். அவனிடம் யாராவது உதவி என்று கேட்டு சென்றுவிட்டால், கையில் இருப்பதை கொடுத்து உதவுவார். ஒருவேளை இல்லையென்றாலும் சும்மா விட மாட்டார். எங்களை போன்ற யாருக்காவது போன் செய்து உதவி கேட்டு அந்த நபருக்கு உதவி செய்வார். ஒரு முறை ஒரு புத்தாண்டு பார்ட்டிக்கு நாங்கள் சென்று இருந்தோம். அப்போது அங்கு ஒருவர் நன்றாக இந்திப் பாடல் பாடிக் கொண்டே இருந்தார். இவன் ஒவ்வொரு பாடலுக்கு பணம் கொடுத்துக் கொண்டே இருந்தார். டேய். போகும்போது மொத்தமா பணம் கொடுத்துடலாம் என்றேன். அது வேற.. இந்த பாட்டு நல்லாயிருக்கு. அதுக்குதான் இந்த பணம் என்றான். பார்ட்டி எல்லாம் முடிஞ்சி போகும்போது டேய்.. ஆட்டோவுக்கு ஐம்பது ரூபா இருந்தா கொடு என்றான். அதான் மயில்சாமி....இப்படி ஒரு நேரம் பணக்காரனாகவும் சில நிமிடங்களில் பிச்சைக்காரனாகவும் மாறிவிடுவான். இதே போல் தான் உதவுவதிலும். காசு இருக்கும் போது கொடுத்துவிட்டு பின்பு பிச்சைக்காரனாக மாறிவிடுவான். அவன் ஒரு இளிச்சவாயன். அவனின் நல்ல குணத்துக்காகத்தான் சினிமாவில் சாதித்த பல இயக்குனர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்" என்றார்.
Published on 17/02/2018 | Edited on 19/02/2018