Skip to main content

“உண்மை சம்பவம்” - விஜய் சேதுபதி பட இயக்குநருடன் விஷ்ணு விஷால் கூட்டணி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vishnu vishal next with gokul

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோகுலுடன் அடுத்த படத்திற்காக கைகோர்ப்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. மேலும் அதிரடி  ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும். விரைவில் பணிகள் தொடங்கவுள்ளது. அதற்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்