தன்னுடைய நடனத்தின் மூலம் வைரலான திருச்சியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் மற்றும் அவனுடைய பெற்றோருடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
எப்போதும் போல் தான் அந்த குறிப்பிட்ட வீடியோவையும் பதிவிட்டேன். தமிழ் புத்தாண்டுக்காக பள்ளியில் ஆடிய நடனத்தைப் பதிவிட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு அது வைரலானது. பெண் வேடத்துக்கான மேக்கப் அனைத்தும் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்தது. வீடியோவைப் பார்த்த பிறகு நான் பெண் மாதிரியே இருக்கிறேன் என்று பள்ளியில் நண்பர்கள் கூறினார்கள். ஒரு பெண் பிள்ளை இல்லையே என்கிற ஏக்கம் பெற்றோர்களுக்கு இதன் மூலம் தீர்ந்தது.
நடன மாஸ்டராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பிரசன்னா மாஸ்டர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். சினிமாவில் பிரபுதேவா மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோரைப் பிடிக்கும். வீட்டில் லீவில் இருந்தால் எப்போதும் டான்ஸ் தான். என்னுடைய அறைக்குள் எப்போதும் இசை சத்தமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். நிறைய பயிற்சி எடுப்பேன். நடிப்பின் மீதும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. தனுஷ் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆடுகளம் படத்தின் 'ஒத்த சொல்லால' பாடலுடைய வைப் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். விளையாட்டில் எனக்கு ஆர்வம் உண்டு. கால்பந்து, கிரிக்கெட், சிலம்பம் விளையாடுவேன்.
மொபைலையும் அதிக நேரம் பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. ரீல்ஸ் பார்த்தாலும் அளவாகவே பார்க்க வேண்டும். முதலில் எனக்கு மேடையின் மீது ஒரு பயம் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது. மொபைல் மற்றும் சமூக வலைதளங்களிலும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு அவை தேவை.