Skip to main content

'வாட்ச்மேன்' படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள்' - ஏ.எல்.விஜய்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் 'வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார்.

 

watchman

 

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய் பேசியபோது.... "ஒரு இயக்குனருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு ஐந்து ஆண்டுகளாக நண்பர், அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராஜ் அர்ஜூன் தாண்டவம், தலைவா, ஹிந்தியில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ஆகிய படங்களில் நடித்தவர். 'வாட்ச்மேன்' படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள். சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, புதுமையாக இருக்கிறது எனக்கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார். ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்