
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹிட்லர்’. ரியா சுமன், இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. விபத்திற்கு பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி” என்றார்.