Published on 15/02/2021 | Edited on 15/02/2021

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்தான அறிவிப்பை வெளியிட்ட கையோடு, இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டார், வசந்தபாலன்.
அதன்படி, இயக்குநர் வசந்தபாலனே முதல் படத்தை இயக்கவுள்ளார். 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இத்தகவலை, 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.