Skip to main content

சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘வலிமை’ படக்குழு!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

ajith

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

 

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வடிவில் கடந்த ஞாயிறன்று (11.07.2021) வெளியிடப்பட்டது. இதையடுத்து, இரு வருடங்களாக ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டுவந்த அஜித் ரசிகர்கள், உற்சாகமடைந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். ‘வலிமை’ மோஷன் போஸ்டர் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையில், யூ-டியூப் தளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக ‘வலிமை’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்