Skip to main content

"புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும்" - காவல் துறையினருக்கு வைரமுத்து வலியுறுத்தல்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

vairamuthu tweet about continue Petrol bomb incident

 

கடந்த 22 ஆம் தேதி இரவு வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த சம்பவங்களுக்கு எதிராக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் வைரமுத்து இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சீராகச் செல்லும் தமிழ்நாட்டரசின் பயணத்துக்கு ஊறுசெய்யும் யாரையும் சட்டமோ சமூகமோ மன்னிக்காது. புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும். 'முள்மரம் முளைவிடும்போதே கிள்ளப்பட வேண்டும்' என்றார் வள்ளுவர். காவல் துறையோர் வள்ளுவர் வழியில் செல்லுவர்" என காவல் துறையினருக்கு வலியுறுத்துவது போல் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்