Skip to main content

''மது என்பது அரசுக்கு வரவு, அருந்துவோர் செலவு'' - வைரமுத்து கண்டனம்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

jhj

 

கரோனா அச்சுறுத்தலால் பல இலட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி (நாளை) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து கவிப்பேரரரசு வைரமுத்து சமூகவலைத்தளத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்... 

*

மது என்பது - 

அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.


மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.


சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.


ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின் 
நீண்ட வரிசையால் 
நிராகரிக்கப்படும்போது?'' 

*

எனப் பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்