Skip to main content

"யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்"; இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் குறித்து வைரமுத்து

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

vairamuthu about israel palestine issue

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல் - அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்ற ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி முதல் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு கடுமையான பதிலடிகளை கொடுக்கும் நோக்கில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பு மோதலிலும் சுமார் 2,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து "யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்" என குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். 

 

அந்த பதிவில், "கவலை சூழ்கிறது. நள்ளிரவில் தூக்கம் அழிகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இரு நாடுகளிலும் போரைத் தொடுத்தவர்களைவிட சம்பந்தமில்லாதவர்களே சாகிறார்கள். பிறகு பேசிக்கொள்ளலாம். நியாயங்களை; போரை நிறுத்துங்கள் முதலில் கருகும் தேசங்களில் ஒலிவம்பூக்கள் பூக்கட்டும், யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்" என குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்