Published on 01/03/2025 | Edited on 01/03/2025

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2025) தனது 72வது பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.