Skip to main content

"கே.கே அவரது பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்" - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

tn cm stalin mourns singer kk

 

கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடந்த செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.கே, அந்நிகழ்ச்சியின் போது திடீரெனெ உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் தங்கிய விடுதிக்கு சென்றார். விடுதியில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். இவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை நேற்று முதல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாடகர் கே.கேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பாடகர் கே.கேவின் மரணம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வசீகரமான, புதுமையான, மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமூட்ட கூடிய ஆத்மார்த்தமான குரலைக் கொண்டு தனது பாடல்களின் மூலம் கேகே அனைத்து மொழி இதயங்களை வென்றுள்ளார். இறந்த பிறகும் அவரது பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்