Skip to main content

ஸ்ரீதேவி மரணம் - அனில் கபூர் வீட்டில் தமிழ் நட்சத்திரங்கள்!

Published on 27/02/2018 | Edited on 03/03/2018

ஸ்ரீதேவியின் மறைவைத் தொடர்ந்து அரசியல், சினிமா பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடத்திருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் அவரது உடல் இந்திய நேரப்படி இன்று (27-2-18) மாலை 5.30க்கு மும்பை வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எம்பாமிங் எனப்படும் உடல் பதப்படுத்துதல், இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளால் அவர் உடல் துபாயிலிருந்து இங்கே வர தாமதமாகிறது என கூறப்பட்ட நிலையில் இந்திய மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் அவரது வீட்டிலும் அவரது கணவர் போனி கபூரின் தம்பியான அனில் கபூர் வீட்டிலும் நேரில் சென்று  ஆறுதல் தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர்.
 

Rajini at mumbai for Sridevi

 

kamal at mumbai for sridevi


மேலும் தமிழ் திரையுலகில் நாசர், ஜெனிலியா, நக்மா, ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே மும்பையில் இருக்கிறார். ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடைந்ததும் இறுதி சடங்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீதேவியின்  இறுதி சடங்கிற்காக நேற்று  மும்பை சென்றுள்ளார். இப்படி தொடர்ந்து பல பிரபலங்கள் ஸ்ரீதேவி மறைவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.     

சார்ந்த செய்திகள்

Next Story

முறிந்த பால்! ரஜினி-கமல் கூட்டணி குறித்து அமைச்சர் கமெண்ட்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019
r

 

அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைவோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினிகாந்தும் இதையே தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’முறிந்த பாலில் ஊற்றிய திரிந்த தயிர் போல பலனளிக்காது’’என்று தெரிவித்தார்.


 

Next Story

அரசியல் ரோஜா படுக்கை அல்ல! - ரஜினி, கமலுக்கு அறிவுரை வழங்கிய நடிகர்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

அரசியல் ஒன்றும் ரோஜாப்படுக்கை அல்ல என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா அறிவுரை வழங்கியுள்ளார். 

 

Sathrugan

 

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து நேற்று மும்பையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

 

அப்போது அவர், ‘ரஜினியும், கமலும் எனது நண்பர்கள்தான். அவர்கள் அரசியலில் குதிப்பதற்கு முன்னர் அதற்கான திரைக்கதைகளை வகுத்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதேசமயம், தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அவர்கள் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால் வேண்டாமென்று அவர்களைத் தடுத்திருப்பேன். அரசியலில் இருக்கும் பல கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியிருப்பேன். அரசியல் என்பது அவர்கள் நினைப்பதைப் போல் ரோஜாப் படுக்கை அல்ல. தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. அவரைத் தாண்டி இந்த நடிகர்களால் மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.