தமிழகத்தில் மிகப்பெரிய பிரபலங்களின் படம் வெளியானாலே அதை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட வேண்டும் என்கிற ஒரு ஆசை பலருக்கு இருக்கும். பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் கூட அது ஒரு எளிதான காரியமாக இருக்கும். ஆனால், அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது அது மிகவும் கடினமான காரியம்தான். அத்தனை எளிதாக விடுமுறை கிடைத்துவிடாது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பிலும், ஷங்கர் இயக்கத்திலும் ரூ.540 கோடி தயரிப்பு செலவில் 2.0 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரஜினி காந்தின் ரசிகர்கள் பலர் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக பல்வேறு காரணங்களை சொல்லி விடுமுறை வாங்கி இருப்பார்கள். ஆனால், கோயம்பத்தூரை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த படத்தை பார்ப்பதற்காக இன்று விடுமுறை அளித்துள்ளது. விடுமுறை மட்டுமல்லாமல் திரைப்படத்துக்கு என்று டிக்கெட்டும் தருகிறதாம்.