நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே மற்றும் கே.வி. ஆனந்துடன் ஒரு படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். சமீபமாக இவர் எந்த ஒரு பொதுமேடைகளிலும் கலந்து கொள்ளாமல் பிஸியாக நடித்து வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மணிகண்டன் (வயது 35), இவர் டீக்கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராகவும் உள்ளார். கடந்த 13ஆம் தேதி இவர் நுரையீரலில் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா சேலத்திலுள்ள மணிகண்டனின் வீட்டிற்கு தனியாக காரில் சென்றார். இரவு 10 மணிபோல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவரது வீட்டுக்கு சென்று மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மணிகண்டனின் மனைவியிடம் மகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.