
தன் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அனிமேஷனில் எடுக்கப்பட்ட இப்படத்திற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்ததனால் அந்நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை பணம் வராததால் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியத்திற்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை லதா ரஜினிகாந்த் இது பற்றி வாய் திறக்காததால் ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்க வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.