Skip to main content

தடைபட்ட சுந்தர்.சியின் கனவுபடம் மீண்டும் தொடங்குகிறது?

Published on 27/06/2018 | Edited on 28/06/2018
sangamithra

 

 

 

இயக்குனர் சுந்தர்.சி அடுத்ததாக 'சங்கமித்ரா' படத்தை பிரமாண்டமாக இயக்கவுள்ளார். இதில் நாயகர்களாக நடிக்கும் ஆர்யா, ஜெயம் ரவியுடன் நாயகியாக ஹிந்தி நடிகை திஷா படானி நடிக்கவுள்ளார். இவர் 'எம்.எஸ்.தோனி' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. 8-ஆம் நூற்றாண்டில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

 

 


இப்படம் கடந்த வருடமே தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படத்தின் முதல் கட்ட வேலைகள் தாமதமானதால் உடனடியாக 'கலகலப்பு 2' இயக்கி வெளியிட்டார். முதலில் நடிகை ஸ்ருதிஹாஸன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படத்திலிருந்து விலகுவதாக ஸ்ருதி அறிவித்தார். அவருக்கு பதிலாக திஷா நடிக்கவிருக்கிறார். இதையடுத்து தற்போது மீண்டும் இப்படத்தின் முன்னணி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 'சங்கமித்ரா' படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.    

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்