Skip to main content

'அது ஒரு யானை கூட்டம்...' மிரட்டும் சுல்தான் ட்ரைலர்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

karthi

 

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-ஆவது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு.

 

‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, பட வெளியீட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்