தெலுங்கு திரையுலகிலுள்ள பல நடிகர்கள் தனக்கு படவாய்ப்பு தருவதாக ஆசை காட்டி, தன்னை பயன்படுத்திக் கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளங்களில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் லாரன்ஸ் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்தார். இது போன்ற பல சர்ச்சைகளால் தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடம் பிரபலமானார் ஸ்ரீரெட்டி. இதனையடுத்து ஸ்ரீரெட்டியால் குற்றம்சாட்டப்பட்டவரான ராகவா லாரன்ஸ், இவருக்கு படவாய்ப்பினை அளித்தார். தற்போது ரெட்டி டைரீஸ் என்று ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழக டெல்டா பகுதிகளை கடுமையாக தாக்கிய கஜா புயலால், பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகளை டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வருகின்றனர். இவர்களை போல ஸ்ரீரெட்டியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்திருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். “புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 300 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை கொடுத்துள்ளேன். இது எனது கடமை. உலகமே என்னை தள்ளிவைத்தபோது, அடைக்கலம் கொடுத்தது தமிழகம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.