Published on 17/10/2018 | Edited on 17/10/2018
![sri reddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/S1SbfWAf3U_vdToU7gDTNdVAyS2xuKl-6Bi4JTu0Vts/1539819368/sites/default/files/inline-images/sri-reddy.jpg)
கடந்த சில மாதங்களாக நடிகர்கள் மீதும், இயக்குனர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. தமிழ்நாடுதான் என்னுடைய பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்திருக்கிறது என கூறிய அவர், அதன் தொடர்ச்சியாக சென்னை வளசரவாக்கத்தில் குடியேறினார். அவர் குறிப்பிட்டவர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர். தற்போது அவரை சந்தித்துள்ளார். அதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்த பதிவு,
நான் லாரன்ஸை அவரது வீட்டில் சந்தித்தேன். அங்கு அவர் எனக்கு ஆடிஷன் வைத்தார், அதன்பின் அவர் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறினார். முன்பணத்தையும் கொடுத்துவிட்டார்.