
SRAM & MRAM குழுமம் மற்றும் Paradigm Pictures AD Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழா லண்டனின் வாரன் ஹவுஸில் நடைபெற்றது. இந்தியா மற்றும் உலகளவில் உள்ள பொழுதுபோக்கு துறையில், பிரம்மாண்டம், தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றில் அற்புதமான பல புதிய முயற்சிகளை இந்த கூட்டாண்மை நிறுவனம் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SRAM & MRAM குழுமம் தொழில்நுட்பம், நிதி, விவசாயம், சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் பயணித்து வருகிறது. இவ்விணைப்பின் நோக்கம் குறித்து டாக்டர் சைலேஷ் எல். ஹீரானந்தானி கூறுகையில், “எங்கள் பார்வை, உலகத் தரம் வாய்ந்த திரைப்பட நகரத்தை உருவாக்குவது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உயர்தர திறமைகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து, கதைசொல்லல் மற்றும் தயாரிப்பின் சிறப்பம்சங்களின் தரத்தை, மறுவரையறை செய்வதாகும்” என்றார்.
50 ஏக்கர் பரப்பளவில், திரைப்பட நகரம் முன்மொழியப்பட்டு, விரைவில் கட்டுமானத்தைத் தொடங்கும் எனும் திட்டமே இந்த இணைப்பின் மூல நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் இந்த வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கான தனிப்பயனாக்கக்கூடிய செட்கள் உட்பட விரிவான உள்கட்டமைப்பை வழங்கும் எனவும் இந்த அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பானது படைப்பாளர்களுக்கான திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை எளிதாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.