Skip to main content

இணையவழி கல்விக்காக மிகவும் சிரமப்பட்ட மாணவர்கள்... நடிகர் சோனு சூட் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

sonu sood

 

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. சமீப நாட்களாகத் தான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

 

முதல் லாக்டவுன் சமயத்தில் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், வீடு திரும்ப பல உதவிகளைச் செய்தார் சோனு சூட். இதுமட்டுமல்லாமல் இந்தக் காலகட்டத்தில் பலருக்கும் உதவி புரிந்துவருகிறார். 


இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் பல பள்ளிகள் வீடியோ கால் மூலம் மாணவர்களுக்கு வகுப்பைத் தொடங்கியுள்ளனர். இதனால் மொபைல் இல்லாத மாணவர்கள் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதுபோல ஹரியானா மாநிலத்திலுள்ள மோர்னி என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரிடம் ஸ்மார்ட் மொபைல் வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தால் மிக தொலைவில் நடந்து சென்று வகுப்பைக் கவனித்து வந்துள்ளனர்.

 

இச்செய்தியை அறிந்த நடிகர் சோனு சூட் அவர்களுக்கு விரைவில் மொபைல் கிடைக்க செய்கின்றேன் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் அந்த கிராமத்தில் தொலைவில் சென்று படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மொபைல் அனுப்பி, அந்த மாணவர்களிடம் வீடியோ காலிலும் பேசியுள்ளார் சோனு சூட். 


 

சார்ந்த செய்திகள்