Skip to main content

விஜய்யை மிரட்ட வரும் சமந்தா ; வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

smantha to act in negative role in vijay 'thalapathy 67' movie under lokesh kanagaraj

 

விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி விஜய்க்கு வில்லியாக மிரட்டும் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் - அனுபவம் பகிர்ந்த சமந்தா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Samantha fainted on the movie shooting set

சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இத்தொடர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் அதை தொடங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் சமந்தாவும் அவரது நண்பர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் கல்லீரல் குறித்து பேசியிருந்தார். அப்போது, “டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என சமந்தா தெரிவித்ததையடுத்து அவர் பேசியது தவறான கருத்து என ஒரு மருத்துவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில், படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலே மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் அல்கேஷ் பெருமளவு உதவினார்” என்றார்.