
ஆன்லைனில் மோசடி நடந்து வருவது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில் ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் வரை பலர் பணத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது சின்னதிரை நடிகர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது.
சின்னதிரையில் பிரபல நடிகராக இருப்பவர் செந்தில். இவர் தற்போது ஆன்லைனில் பணம் இழந்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியல. ஒருத்தன் ஆன்லைன்ல 15,000 என்கிட்ட இருந்து ஆட்டைய போட்டான். கோயம்புத்தூருல இருந்து எனக்கு தெரிஞ்ச ஹோட்டல் தொழிலதிபர் ஒருவர், வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது, எனக்கு ஒரு உதவி வேணும்னு. அவர் எப்போதாவதுதான் மெசேஜ் செய்வதால், உடனே என்னன்னு கேட்டேன். 15,000 சீக்கிரம் அனுப்புன்னு சொல்லியிருந்து ஒரு நம்பரும் அனுப்பியிருந்தார்.
அந்த நம்பரை நான் செக் கூட பண்ணல. உடனே பணத்தை அனுப்பிட்டேன். அப்புறம் பார்த்தா, அதுல அவர் பேர் வராம வேறொரு பேரு வருது. அப்போதான் டவுட் வந்து செக் பண்ணேன். அதுக்குள்ள பணம் போயிடுச்சு. உடனே அவருக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவர் என் வாட்ஸ் ஆப்ப எவனோ ஹேக் செஞ்சிட்டான், நீ 500வது கால் என்றார். பிறகு சைபர் கிரைமில் புகார் கொடுத்திருப்பதாக சொன்னார்” என்றார். பின்பு அனைவரும் செக் செய்யம்ல் பணம் அனுப்பாதீங்க என கேட்டுக்கொண்டார்.