
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் சிவக்குமாரின் திருக்குறள் 100 உரை தொடர்பான மாணவர்களின் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடம் உரையாடி பேசிய சிவகுமார், தனது பள்ளி கால அனுபவங்களை பகிர்ந்தார்.
பின்பு மாணவர்களை வாழ்த்தி பேசிய அவர், “இந்த நாளை என் வாழ் நாளில் நான் மறக்க மாட்டேன். இது போல ஒரு சந்தோஷமான சூழலை நான் பார்த்ததில்லை. தமிழ் புலவன் 99 பூ சொல்லியிருக்கான். அதில் புன் சிரிப்பை சேர்த்தால் 100 பூ. அந்த 100 பூவை உங்களிடம் தூவி நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
பின்பு வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை என ஆரம்பித்து நூறு பூக்களின் பெயர்களை தொடர்ச்சியாக சொல்லி காண்பித்து வாழ்த்தினார். சிவக்குமார் இந்த பேச்சு மாணவர்கள் உட்பட அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.