Skip to main content

'தமிழ் பக்கம் தாவிருக்கே இந்த இங்கிலீசு...' - வெளியானது சிவகார்த்திகேயன் பாடல்

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

sivakarthikeyan prince movie Bimbilikki Pilapi lyric video released

 

சிவகார்த்திகேயன், 'டான்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 

இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'பிம்பிலிக்கி பிலாபி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி உள்ளிட்டோரின் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்