
‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன், நடிகை சமந்தாவுடன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. 'சீமராஜா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் துள்ளும் குதிரையில் உட்கார்ந்தபடி தனது கையில் ஒரு கொடியுடன் இருப்பது போல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.