தமிழ் திரைப்பட உலகில் சமீபமாக கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை தயாரித்து வந்தாலும் சமீபமாக 'வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் தயாரித்து வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படங்கள் 'எல்.கே.ஜி' மற்றும் 'கோமாளி'. இந்த இரண்டு படங்கள் மற்றும் அவர்களது இன்னொரு தயாரிப்பான 'பப்பி' ஆகிய மூன்று படங்களின் வெற்றி விழா சென்னையில் 24.11.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
அப்போது, எல்.கே.ஜி படக்குழுவினர் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து முதலமைச்சரிடம் விருதை பெற்றுக்கொண்டு சென்றனர். படக்குழுவினர் அனைவரும் வாங்கிமுடித்தபின், அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதலமைச்சர் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷுடன் ஆர்.ஜே. பாலாஜியும், நடிகை பிரியா ஆனந்த் மற்றும் சில எல்.கே.ஜி படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்தபின் ஆர்.ஜே. பாலாஜி தனது மொபைலை செல்ஃபி எடுப்பதற்காக வெளியே எடுத்து தயாரிப்பாளருடன் சார் ஒரு செல்ஃபீ என்பது போல் பெர்மிஸன் கேட்பார் ஆர்.ஜே.பாலாஜி, கடைசியாக புன்னகையுடன் சம்மதித்தார் ஈ.பி.எஸ். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் ஈ.பி.எஸ்ஸுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். செல்ஃபீ வித் சிஎம் இன்னைக்கு ஹேஸ்டேக் வொர்க்கவுட் ஆகிடும் என்று தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜியை கலாய்ப்பார்.