Skip to main content

"நீதிபதி கூறிய கருத்துகள் என்னைப் புண்படுத்தின" - நடிகர் விஜய் தரப்பு வாதம்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

vijay

 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், தீர்ப்பில் சில கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.

 

இதையடுத்து வரி பாக்கியைச் செலுத்திய விஜய், தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தின எனக் கூறிய விஜய் தரப்பு, கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் தெரிவித்தது. மேலும், வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால்தான் இந்த வழக்கைத் தொடர்ந்ததாகவும் விஜய் தரப்பு தெரிவித்தது.

 

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்