நடிகர் சிம்பு நடித்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கின்ற படம்தான் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கே வெளிவரப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படம் முடிவடைந்த நிலையிலும் ரஜினி, அஜித் என்று இரண்டு பெரிய நடிகர்களின் படம் அப்போது வெளிவர இருந்ததால் வந்தா ராஜாவாதன் வருவேன் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டது. இதனை அடுத்து இந்தப் படம் சிம்புவின் பிறந்தநாளான ஃபிஃப்ரவரி மூன்றாம் தேதி வெளியாவதாக சொல்லப்பட்டது.
பின்னர், தற்போது இந்த படம் ஃபிஃப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் சிம்பு தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை வைத்தார். “எனது திரைப்படம் வெளியாகும்போது கட்டவுட், பாலபிஷேகம் என்று தேவையற்ற செலவு செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அந்த காசில் பெற்றோருக்கு நல்ல ஆடைகள் எடுத்து கொடுங்கள்” என்று கூறினார். இதனை அடுத்து, சிம்பு ரசிகர்கள் எங்க தலைவனை பார்த்திஞ்களா. அதுதான் எஸ்.டி.ஆர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள்.
சிலர் சிம்புவுக்கு இருப்பதே இரண்டு அல்லது நான்கு ரசிகர்கள்தான் இதில் இந்த கட்டளை வேறா? என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். இதுபோல கிண்டல்கள் அதிகமாக மீண்டும் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகொள் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனக்கு இருக்கின்ற இரண்டு நான்கு ரசிகர்கள் ஊரெங்கும் கட்டவுட்கள் வையுங்கள். எனக்கு பால் பாக்கெட்டில் ஊற்றாமல், அண்டா அண்டாவாக ஊற்றுங்கள் என்று கூறினார். இந்த வீடியோவை அடுத்து பலர் சிம்புவை கலாய்க்க தொடங்கினார்கள். சிம்புவின் ரசிகர்கள், சிம்பு ஒன்றும் எங்களிடம் கேட்டதில்லை, முதல்முறையாக கேட்டிருக்கிறார் கண்டப்பாக அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒருசில சிம்பு ரசிகர்கள் வீடியோ போட்டு, “நாங்கள் சும்மாவே செய்வோம், இப்போ எங்க சிம்புவே கேட்டுட்டாரு இனி பாருங்க” என்று பதிவிட்டுள்ளனர்.
சிம்புவின் இந்த பேச்சுக்கு எதிரொலியாக தமிழக பால் முகவர் சங்கத் தலைவர், படம் வெளியான் நாளன்று சிம்புவின் ரசிகர்கள் பாலை திருடாமல் தவிர்க்க எங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சிம்புவின் இந்த வீடியோ குறித்து வந்த மீம்கள் என்ன என்று பார்ப்போம்....