![aadhik](http://image.nakkheeran.in/cdn/farfuture/QgF1oVS734PhfK_2B1rXRjXT8AP4Hms2v57RHayl8MY/1533347628/sites/default/files/inline-images/IMG_9388.jpg)
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடந்த ஆண்டு வெளியாகி படு தோல்வி அடைந்தது. இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாததுக்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக அறிவித்தனர். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் சிம்பு மேல் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பெரிதாக பேசப்படாத இருந்த இந்த பிரச்னை தற்போது மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பத்திரிகையாளர்களிடம் பேசியது தொடர்பாக சிம்பு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில்...."சிம்பு ஆதிக்கிடம், கூட இருந்த நீயே இப்படி செய்யாலாமா... என்னுடன் இரண்டு வருடம் பயணித்த நீயே என்னைப் பற்றி தெரியாமல் பேசி இருக்கிற. என்னைப் பற்றி பேசியதால் உனக்கு ஏதாவது புரோஜனமாக நடந்ததா? இதன் மூலம் உனக்கு பட வாய்ப்பு கிடைத்தால் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். என்றார். அதற்கு ஆதிக்..."அண்ணா நா எதுவுமே உங்கள பத்தி பேசல, நீங்க என் மேல் ரொம்ப கோபமா இருக்கீங்க அதனால என்ன போட போறீங்கன்னு சொன்னாங்க. அதான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்" என்றார். இப்படி இவர்கள் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது சிம்பு மேல் தவறு இல்லை என்பது போல் தெரிகிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ஏதோ பட வாய்ப்பிற்காக தான் இவ்வாறு சிம்புவிற்கு எதிராக பேசியுள்ளாரோ என்றும் தோன்றுகிறது என்று ரசிகர்களிடையே இதுகுறித்த கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.