Published on 26/11/2018 | Edited on 26/11/2018
வெற்றிமாறனின் இணைஇயக்குனரும், ஆடுகளம் பட வசனகர்த்தாவான இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'மதயானை கூட்டம்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் சுகுமாரன் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க சந்தனு ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாந்தனு சமீபத்தில் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு பின் கைவிடப்பட்ட நிலையில் தற்போது இவர் விக்ரம் சுகுமாரனுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.