Skip to main content

“புதிய முயற்சி... தாக்கத்தை ஏற்படுத்தியது” - ஷங்கர் பாராட்டு

Published on 03/03/2025 | Edited on 03/03/2025
shankar praised arivazhagan sabdham movie

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. ஆதி, அறிவழகன், தமன் கூட்டணி, இதற்கு முன்பு இணைந்து பணியாற்றிய ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் . 

ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு ஹாரர் படத்தில் ஒலியை அடிப்படையாகக் கொண்ட புதிய முயற்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறிவழகனின் டெக்னிக்கல் விஷயமும் விறுவிறுப்பான கதை சொல்லலும் குறிப்பிட வேண்டிய ஒன்று. 

இடைவெளிக்கு முன்பு ஒலியை வைத்து வரும் காட்சி எதிர்பாராதவிதமாக இருந்தது. உதயகுமாரின் மிக்ஸ், ஆதியின் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ், தமனின் இசை அனைத்தும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அறிவழகன் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இவரது முதல் படமான ஈரம் படத்தை ஷங்கர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

சார்ந்த செய்திகள்