ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ள படம் “தவம்“. இப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தற்போது மிக மிக அவசரம், தவம் ஆகிய படங்கள் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாயகன் நாயகியாக புதுமுகம் வசி, பூஜாஸ்ரீ நடித்துள்ளார்கள். மேலும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன் ஆகியோர் பேசியபோது....

''விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது இந்த படம். முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். விவசயாத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படம் இது. எல்லோரும் மறந்த ஒரு காதலை இந்த படத்தில் சொல்லியிருக்கோறோம் அது நிச்சயம் பெரிய வரவேற்பை பெரும். படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் அனைத்து கதாபாத்திரமும் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புதுமுக நடிகர் போல் தெரியவில்லை அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்று வெகுவாக பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு படம் இது என்று கூறினார்கள்'' என்றனர்.