Published on 14/06/2019 | Edited on 14/06/2019
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி குறித்த பாடம் ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசுத் துறைகளில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும்போது, இந்தியும் கட்டாயம் என்பது, இந்தியை திணிக்கும் முயற்சி என்றும், இந்தியாவை ஒரே மொழி பேசும் நாடாக மாற்ற முயற்சி செய்வது, இறையாண்மையை சிதைக்கும் செயல் என்று கூறினார்.
இதனை அடுத்து பாடத்திட்டத்தில் ரஜினி குறித்த பாடம் இருப்பதை கண்டித்து, “ ரஜினியை விட கமல்ஹாசன் தான், கலைத்துறையில் அதிகம் உழைத்தவர்.ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல்” என்று கூறியுள்ளார்.