Skip to main content

ரசிகர்களுக்கு தக்கபடி உருவாகும் காலா அறிமுக பாடல் 

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
sant


பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் காலா படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கேட்டு பதிவிட்டுருந்தார். அதில் காலா இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. காலா படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!" எனக் பதிவிட்டு, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90 - 2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து’ என மொத்தம் நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருந்தார். பின்னர் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். வாக்களிப்பின் முடிவில் "மேற்குறிய அனைத்தும் கலந்து" என்ற ஆப்ஷனுக்கு மக்கள் அதிக வாக்கு அளித்தனர். எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக அனைத்தும் கலந்த கலவையான இசையாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.  
 

சார்ந்த செய்திகள்