Skip to main content

மீண்டும் களைகட்டிய சாமி 2 படப்பிடிப்பு 

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
hh


கடந்த 2003ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயர் படத்தை இயக்கி வருகிறார் ஹரி. முதல் பாகத்தில் நடித்த விக்ரமே இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது விக்ரமின் தந்தை இறந்துவிட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாமி 2 படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள ஒரு தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த தியேட்டரின் பெயரை பி.பி. தியேட்டர் என பெயர் மாற்றி, அங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த கர்ணன் சினிமா திரையிடப்பட்டு உள்ளது போல் பேனர்களும் கட்டி இருந்தனர். அந்த படத்தை பார்க்க மக்கள், டிக்கெட் கவுண்டரில் முண்டியடிப்பது போலவும், அரசியல்வாதிகள் வரிசையாக நிற்பது போல் துணை நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் இருந்து திரிஷா விலகியதையடுத்து விகாரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்