
நடிகர் மற்றும் தயரிப்பாளர் ஆர்.கே சினிமாவில் பன்முகம் காட்டுவது மட்டுமல்லாமல் பெரிய பிசினஸ்மேனாகவும் வலம் வருகிறார். பதினேழு வருடங்களாக வி கேர் என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆர்.கே தற்போது தனது நிறுவனம் சார்பாக புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற தலையில் அடிக்கும் டை ஷாம்பூ வை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார். இதன் அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது அதில் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் பாலிவுட் நடிகர் சமீர் கோச்சரும் கலந்துகொண்டனர். அப்போது நிகழிச்சியில் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை பற்றி பேசிய ஆர்.கே....."நான் இந்த ஷாம்பூ பற்றி சொன்னதும் விவேக் ஓபராய் அவர்கள் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்.. இதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது. இதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்" என்றார் ஆர்கே.