Skip to main content

ஆர்.ஜே பாலாஜியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்... வெளியான புதிய அறிவிப்பு

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

rj balaji and aishwarya rajesh joins new film

 

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஆர் ஜே பாலாஜி  எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் வெற்றி பெற்ற  ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தை 'வீட்ல விசேஷங்க' என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கவும் செய்கிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று  வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், பிரபல மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். டார்க் த்ரில்லர் காமெடியாக இப்படம் உருவாகவுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் வரும் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்