
சர்ச்சைகளுக்கு பேர் போன பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா சமீபத்தில் 'காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்' என்ற ஆபாசப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அவர் தயாரித்து இயக்கிய இப்படத்தில் வெளிநாட்டு பார்ன் பட நடிகை மியா மல்கோவா நிர்வாணமாக நடித்துள்ளார். இந்நிலையில் 'காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்' படம் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் அமைப்பினர் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் 40க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார்கள் அளிக்கப்பட்டன. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கோபால் வர்மா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பினர். இதைத்தொடர்ந்து ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசில் ராம்கோபால் வர்மா ஆஜரான அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருடைய மொபைல் போன், லேப்-டாப்பையும் பறிமுதல் செய்தனர். மீண்டும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்ற நிலையில், இந்த விசாரணைக்கு பிறகு ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராம் கோபால் வர்மா கைது குறித்து போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.