
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமாகி பின் தீரன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்டரி கொடுத்த ரகுல் பிரீத்திசிங், அதன் பின் ஸ்பைடர் படத்தில் நடித்தார். தற்போது சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ரகுல் பிரீத்திசிங் தற்போது நடிக்கும் படங்களில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என்று செய்திகள் பரவலாக வெளியானது. இதுகுறித்து பதில் அளித்து ரகுல் பிரீத்திசிங் பேசுகையில்....."நான் தற்போது நடிக்கும் படங்களில் முதன்மை நாயகியாகத் தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் டம்மி ஆக்கவில்லை. இரண்டாவது நாயகியாகவும் நடிக்கவில்லை. எந்த படத்திலாவது, மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை இரண்டாவது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன்" என்றார் ஆவேசமாக.