நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாகும், அதுகுறித்த விவரங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் இன்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, தனது அரசியல் வருகை குறித்து பேட்டியளித்தார். அப்போது, அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு கட்சிப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது செய்தியாளர் சந்திப்பில், "அண்ணாத்த படத்தில் எனக்கு இன்னும் 40% பணிகள் மீதமுள்ளன. அதை முடித்து தர வேண்டும். அதை முடித்து தர வேண்டியது என்னுடைய கடமை. அண்ணாத்த படத்தை முடித்துதந்துவிட்டு கட்சிப்பணிகளில் இறங்குவேன்" என கூறினார்.
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி, 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கட்சி பணிகளில் இறங்குவேன் என அறிவித்திருப்பதால், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.