Skip to main content

ஷூட்டிங் செல்லும் வழியில் சாமி தரிசனம் செய்த ரஜினி

Published on 25/04/2025 | Edited on 25/04/2025
rajinikanth worship between jailer 2 shooting in coimbatore

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. 

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் தற்போது நடந்து வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண அவரது ரசிகர்கள் கூடுகின்றனர். அவர்களுக்கு ரஜினி கையசைத்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கோவையில் மாங்கரை பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனைக்கட்டியில் இருந்து மாங்க்ரைக்கு காரில் சென்ற ரஜினி போகும் வழியில் இருக்கும் மாதேஷ்வரர் கோயிலில் வழிபட்டு சென்றார். அவரை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சார்ந்த செய்திகள்