
இயக்குனர் மிஷ்கினின் திரைக்கதையில் வெளிவந்த சவர்க்கத்தி படம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தில் டைரக்டர் ராம், பூர்ணா ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் ராம்..."பாகுபலி2 படத்திற்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என தியேட்டர்கள் அதிபர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. இதை சரிக்கட்ட காலா போன்ற பெரிய படம் வரவேண்டும் என்கின்றனர். அப்படி வந்தால் தான் திரையரங்கிற்கு மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்கிறார்கள். இப்படியான சூழலிலும் சவரக்கத்தி படத்திற்கும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தாலும் சவரக்கத்தி என்ற தலைப்பால் இது வன்முறை நிறைந்த படமாக இருக்குமோ? என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை இந்த சவரக்கத்தி திருத்தும் கத்தி. அழகு பூர்வமான கத்தி" என்றார்.