Published on 07/03/2018 | Edited on 08/03/2018
கடந்த ஆண்டு இறுதியில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றினார். தற்போது ரஜினி கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. ரஜினியும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான நிர்வாகிகளை தேர்வு செய்து வரும் நிலையில் ரஜினிகாந்த் ஏற்கனவே டுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் அவரை 45 லட்சத்துக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதையடுத்து தற்போது ரஜினி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இணைந்திருக்கிறார். ரஜினிகாந்த் பெயரில் தொடங்கப்பட்ட இந்த பக்கத்தை இதுவரை ஒரேநாளில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தையும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதனால் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.