Published on 24/02/2018 | Edited on 24/02/2018
![raj](http://image.nakkheeran.in/cdn/farfuture/zt-3B1rHSnHiern4DyzwBhnt68f1-74xpHE8RlabtMM/1533347624/sites/default/files/inline-images/DWtltedU0AE3mCH.jpg)
ஒரு புறம் கமல் தன் அரசியல் கட்சியின் கொடி, பெயர் என அறிவிப்பில் பிசியாய் இருக்கிறார். இன்னொருபக்கம் ஏற்கனவே அரசியலில் இறங்கப்போகும் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தன் மக்கள் மன்றம் சார்பில் ரசிகர்கள் சந்திப்பு என பிசியாய் இருக்கும் இந்த பரபரப்பான சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்வி பல நாட்களாக இருந்து வந்தது. அதற்கு அட்லீ தான் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக ரஜினியின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். பிரமாண்டமாக எடுக்கப்போகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.