Skip to main content

"மோசலோ மொசலு..." - அண்ணாச்சிக்காக ஒன்று சேர்ந்த இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள்   

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

rajamouli and maniratnam release Mosalo Mosalu Lyric Video

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள், அவர்களது கடை விளம்பரங்களில் நடிப்பது வழக்கம். அதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது தி லெஜண்ட்  திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்க, விவேக், பிரபு, யோகிபாபு,நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான "மோசலோ மொசலு..." என்ற பாடலை இந்தியாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் மற்றும் ராஜமௌலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். பா.விஜய் வரிகளில் அர்மான் மாலிக், முகேஷ் முஹம்மது ஆகியோர் குரலில்  வெளியாகியுள்ள இந்த பாடலை தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்