Skip to main content

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் அதிரடி பதில்...

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
lawrence

 

 

 

தெலுங்கு பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி 'தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்... "என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் 'ரெபல்' படத்தை இயக்கிய சமயம் ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், நான் அந்தப் படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என் மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்? 

 

 

 

நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்கு வைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல,  பூஜை செய்ய நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  இதற்குப் பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனைதான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பதுதானே? நீங்கள் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு காட்சியோ வசனமோ கொடுக்கிறேன். சில டான்ஸ் ஸ்டெப்களும் தருகிறேன். நீங்கள் ஆட வேண்டும். கஷ்டமானதாகத் தந்து உங்களை தோற்கடிப்பேனென்று நினைக்க வேண்டாம். ஈஸியாகத்தான் தருவேன். உங்களிடம் திறமை இருப்பதை செய்தியாளர்கள் முன்பே நீங்கள் நிரூபித்து உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திப்படுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன். 

 

 

 

நான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரைத் தொடர்பு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகளுடன் வந்து நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன். உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன், அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக்  கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி இதற்கு பதில் தருவாரா அல்லது அடுத்த பட்டியலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராடவுள்ளேன்' - ஸ்ரீரெட்டி அறிவிப்பு ! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஒரு பக்கம் பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமாவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கிய நடிகை ஸ்ரீரெட்டி பொள்ளாச்சி சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

sri reddy

 

இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது.... "பொள்ளாச்சி சம்பவம் ஏழு வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய அடுத்த நடிகை..! படங்கள் உள்ளே

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
sri reddy

 

சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்னிந்திய சினிமாவின் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 விழாவில் தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு அவரை சமூகவலைத்தளத்தில் கண்டித்து "கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது" என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகை ஹேமா குறித்தும் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அடுக்கடுக்காக பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே... "ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்" என்று விமர்சித்திருந்தார். 

 

 

 

 

sri reddy


இந்நிலையில் தற்போது ஹேமா மீது கோபமடைந்த ஸ்ரீரெட்டி...."ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்" என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது தெலுங்கு பட உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.